Connect with us

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று தீர்மானித்த விஜயசாந்தி: ஓபன் டாக்..

Featured

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று தீர்மானித்த விஜயசாந்தி: ஓபன் டாக்..

விஜயசாந்தி, பாரதிராஜாவின் “கல்லுக்குள் ஈரம்” படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர். இவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். “வைஜெயந்தி ஐபிஎஸ்” என்ற படத்தில், மாஸான போலீஸ் அதிகாரியாக நடித்தவர், அதன்பிறகு பல படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து நம்பிக்கையுடன் பிரபலமானார்.

இவர் சினிமாவில் பிஸியான நாயகியாக வலம் வந்தபோது, அரசியலில் களமிறங்கினார். சமீபத்தில், விஜயசாந்தி ஒரு பேட்டியில் தனது திருமணத்தைத் தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெறாததற்கான காரணங்களைப் பற்றி பேசியுள்ளார். குழந்தை பெறுவது பெண்களுக்கு மிகவும் முக்கியமான விஷயமெனவும், அதனைப் பற்றி நிறைய யோசித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது, “எங்கேயோ ஒரு இடத்தில் எனக்கு குழந்தைகள் இருந்தால், அதனால்தான் தெலுங்கானாவில் என்னை பிளாக்மெயில் பண்ணுவார்கள்” என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பரபரப்பான சூழ்நிலையில், தன் கணவரிடம் இந்தப் பேச்சை பகிர்ந்த போது, அவர் அதை முழுமையாக புரிந்து ஏற்றுக்கொண்டார் என கூறியுள்ளார்.

இந்த பேட்டி, விஜயசாந்தியின் தனிப்பட்ட வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையையும் விளக்குகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top