Connect with us

இனி வில்லன் கேரக்டருக்கு வாய்ப்பே இல்லை…விஜய்சேதுபதியின் முக்கிய முடிவு!

Cinema News

இனி வில்லன் கேரக்டருக்கு வாய்ப்பே இல்லை…விஜய்சேதுபதியின் முக்கிய முடிவு!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி…ஆரம்பத்தில் இருந்து மக்களை பெரிதாக கவர்ந்தவர் இவர்…அதனை போல வித்தியாசமான கதாபாத்திரம் கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்…அதனால் மக்கள் செல்வன் என மக்களால் கொண்டாடப்பட்டு இருக்கின்றார்….

ஹீரோ மட்டுமன்றி வில்லன் சிறிய கதாபாத்திரங்கள் என ஹீரோவின் இமேஜை உடைத்து தனக்கென தனி பாதையை செய்து வருகின்றார்….விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம்,ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்…மக்களால் ஹீரோவாக இவரை கொண்டாடியதை விட வில்லனாக கொண்டாட பட்டார்..

இந்நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்…சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய அவர் தான் இனிமேல் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்…அது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இருக்கின்றது..

வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் திரைப்படத்தின் ஹீரோ தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதாலேயே சில திரைப்படங்களில் வில்லனாக நடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்…இனி வரும் காலங்களில் அது நடக்க வாய்ப்பு இல்லை…

மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் ஹீரோவின் இமேஜை குறைக்காமல் நடிக்க அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்…சில திரைப்படங்களில் வில்லனாக நடித்த காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்…அதுவே எனக்கு விருப்பம் இல்லாமல் இருக்க காரணம்…

எனவே இந்த காரணங்களால் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்க போவதாகவும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்…இந்த தகவல் தற்போது மக்கள் மத்தியில் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றது…இதில் சொல்வது விஜய் பற்றியா ஷாருக்கான் பற்றியா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top