Connect with us

அஜித் குமார் குடும்பத்தை நேரில் சந்தித்த விஜய் – ஆறுதல் கூறி, நிதி உதவி..

Featured

அஜித் குமார் குடும்பத்தை நேரில் சந்தித்த விஜய் – ஆறுதல் கூறி, நிதி உதவி..

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் என்ற இளைஞர், போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது போலீசார் அவரை மிகக்கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. மிளகாய்பொடி தூவி, தண்ணீர் தராமலும் சித்ரவதை செய்ததால், அஜித் குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து நடிகரும் தமிழ்நில அரசியலில் புதிய பயணத்தை தொடங்கியுள்ள விஜய், போராட்டத்துக்குத் துணைநின்றார். அதனைத் தொடர்ந்து தற்போது அவர் நேரில் சென்று அஜித் குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அந்த குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த விஜய், நிதி உதவியாக இரண்டு லட்சம் ரூபாயும் வழங்கினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடிதடியும் கலவரமும் சூழ்ந்த பிக் பாஸ் வீடு! திவாகர் நெஞ்சில் எட்டி மிதித்த விஜே பார்வதி!

More in Featured

To Top