Connect with us

“விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மேரி கிறிஸ்துமஸ் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?!”

Cinema News

“விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மேரி கிறிஸ்துமஸ் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?!”

இந்தியா சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்து வரும் இவர், கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருந்தார். தற்போது கத்ரீனா கைஃப் – உடன் இணைந்து மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் வசூல் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 12ம் தேதி வெளியான இந்தப்படம், அன்றைய தினம் மட்டும் 2.45 கோடி வசூல் செய்தது. அடுத்த நாளில் 3.45 கோடியும், மூன்றாவது நாளில் 3.83 கோடியும் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த திங்கள் அன்று 1.65 கோடி வசூல் செய்த மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம் 1.3 கோடியும் வசூல் செய்திருக்கிறதாம். ஆக மொத்தமாக, ஐந்து நாட்களில் மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம் 12.68 கோடி வசூல் செய்திருக்கிறதாம். ஆகையால் இந்த வாரம் மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம் 15 கோடி வசூலை கடந்து விடும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படம் தொடர்பாக விஜய்சேதுபதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் ஹிந்தி மொழி எதிர்ப்பு குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “இந்த மாதிரியான கேள்வியை நீங்கள் அமீர்கான் சார் வந்த போதும் கேட்டீர்கள் இல்லையா? எல்லா சமயத்திலும் இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்? இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டு என்ன ஆகப் போகிறது. முதலில் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவே இல்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!!

More in Cinema News

To Top