Connect with us

யோகிபாபுவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தூக்குதுரை’ படத்தின் Trailer வெளியாகி Viral!

Cinema News

யோகிபாபுவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தூக்குதுரை’ படத்தின் Trailer வெளியாகி Viral!

யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் வெளியான ‘ட்ரிப்’ படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், இப்போது இயக்கியுள்ள படம், ‘தூக்குதுரை’. யோகிபாபு நாயகனாக நடிக்கும் இதில் இனியா, ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ரவிவர்மா ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி பேய் படங்களுக்கு என்று இருக்கும் அதே டெம்ப்ளேட்டில்தான் இந்த படமும் உருவாகியுள்ளது என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது.

பழங்கால கிரீடம் ஒன்றை திருட சென்ட்ராயன், பால சரவணன் குழு கிராமம் ஒன்றுக்கு வருகிறார்கள். இன்னொரு பக்கம் தன் காதலி இனியாவின் திருமணத்தை தடுத்து அவரை காப்பாற்ற யோகிபாபுவும் வருகிறார். இவர்களை சுற்றியே மொத்தப் படமும் நகரப் போகிறது என்பதை ட்ரெய்லரின் மூலம் உணரமுடிகிறது.

காமெடி கதைக்களம் என்றாலும் ட்ரெய்லரில் குபீர் சிரிப்பை வரவழைக்கும்படியான வசனங்கள் எதுவும் இல்லாதது குறை. நல்ல திரைக்கதையுடன், விறுவிறுப்பான காட்சியமைப்புகள் இருந்தால் குடும்ப ஆடியன்ஸை கவரலாம். வரும் ஜனவரி 26ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top