Connect with us

நான் அந்த முன்னணி நடிகருடன் நடிக்கவில்லை: விஜய் சேதுபதி வெளிப்படையாக கூறினார்..

Featured

நான் அந்த முன்னணி நடிகருடன் நடிக்கவில்லை: விஜய் சேதுபதி வெளிப்படையாக கூறினார்..

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார்கள். “மகாராஜா” படத்தின் வெற்றியுடன், அவர் தனது மாஸ் கம் பேக்கை அடைந்தார். தற்போது, “பிக் பாஸ் 8” நிகழ்ச்சியையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் “விடுதலை 2” என்ற புதிய படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வரும் 20-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதி தற்போது ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, தெலுங்கு ப்ரோமோஷனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ராம் சரணின் 16வது படத்தில் நடிக்க இருப்பதாக கேள்வி எழுந்து, விஜய் சேதுபதி “இல்லை” என பதிலளித்தார். அதை தொடர்ந்து, “ஏன் நடிக்கவில்லை?” என கேட்ட போது, “முதலில் எனக்கு நேரம் இல்லை, ஆதனால் நான் கதைகளை கேட்டுக்கொண்டு இருக்கின்றேன். சில சமயம் கதைகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் என் கதாபாத்திரங்கள் வலுவாக இல்லை” என்றார்.

இந்த கருத்து, அவர் கதை தேர்வு செய்யும் போது அதன் உள்ளடக்கம் மற்றும் அவரது கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top