Connect with us

விஜே பிரியங்கா லண்டன் செல்லும் உண்மையான காரணம் இதுதானா? பிரபலம் இப்படி சொல்றாரே?

Featured

விஜே பிரியங்கா லண்டன் செல்லும் உண்மையான காரணம் இதுதானா? பிரபலம் இப்படி சொல்றாரே?

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா சமீபத்தில் இரண்டாவது திருமணத்தை செய்துகொண்டுள்ளார். வசி என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வசியும், பிரியங்காவைப்போல் முன்பே ஒரு திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றவர். இந்நிலையில் பிரியங்கா – வசி திருமணத்தைப் பற்றிய தகவல்களைப் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒருவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரை உலகில் விஜய் டிவி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அந்த சேனலில் பணியாற்றிய பலர் இன்று திரைப்படத் துறையில் பெரிய இடத்தை பிடித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், யோகி பாபு, நெல்சன் திலீப் குமார், டிடி, கோபிநாத் ஆகியோர் அந்த பட்டியலில் முக்கியமானவர்கள். அதேபோல் விஜய் டிவியின் முக்கியமான தொகுப்பாளினிகளில் ஒருவராக பிரியங்காவும் உள்ளார்.

அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் கலகலப்பாக, சலிப்பின்றி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் அவருக்கு மேலும் பிரபல்யம் சேர்த்தது. இதனால் ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பிரியங்கா, 2016ஆம் ஆண்டு தனது விஜய் டிவி சக ஊழியரான பிரவீன் குமாரை திருமணம் செய்துகொண்டார். காதலாகத் துவங்கி திருமணமாகிய அவர்களின் வாழ்க்கை, சில பிரச்சனைகள் காரணமாக 2022ஆம் ஆண்டு சட்டபூர்வமாக விவாகரத்து மூலம் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு வசி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திடீரென நடைபெற்ற இந்த திருமணம் பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வசியும் முன்பு திருமணமாகி, பின்னர் விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிரியங்கா மற்றும் வசியுக்கு கிட்டத்தட்ட 10 வயதுக்கு மேல் வித்தியாசம் உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அளித்த பேட்டியில், “பிரியங்கா மற்றும் வசியுக்கு 10 வயது வித்தியாசம் உள்ளது. வசியின் முதல் திருமணம் முடிந்த பிறகு, இருவரும் நட்பில் இருந்தனர். தற்போது வெளிநாடுகளுக்குச் செல்வது, வசியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவே. வசியுக்கு ஏற்கனவே அங்கே ஒரு குடும்பம் உள்ளது” என தெரிவித்திருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு பிரியங்கா மற்றும் வசி, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் விரைவில் அங்கேயே செட்டில் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

See also  STR 49 வெற்றிமாறன்–சிம்பு புதிய படம்: டைட்டில் ரிவீல்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top