Connect with us

தன் திருமண நாளில் விஜய் எடுத்த அதிரடி முடிவு – தமிழகம் முழுக்க பரபரப்பு!

Featured

தன் திருமண நாளில் விஜய் எடுத்த அதிரடி முடிவு – தமிழகம் முழுக்க பரபரப்பு!

நடிகரும் தற்போது அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் விஜய், திரைப்படத்திலிருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளார். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படமே அவரது கடைசி படமாகும். இந்த படம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய் மற்றும் சங்கீதா குறித்து பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. ஆனால், அவை அனைத்தும் உண்மையற்றவை என பத்திரிகையாளர்கள் சிலர் விளக்கமளித்துள்ளனர். நடிகர் விஜய் வழக்கம்போல் இவ்வாறு எழும் வதந்திகளுக்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருக்கிறார்.

தொடர்ந்து, விஜய் தனது திருமண நாளான வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முக்கிய அரசியல் முடிவொன்றை எடுத்துள்ளார். அவர் தலைமையிலுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, அந்த நாளில் மதுரையில் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியாக திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் விக்கரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநில மாநாடு மிகுந்த வெற்றியுடன் நடைபெற்றது. அந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. விழாவின் அந்நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மதுரை என்பது நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ள பகுதியில் ஒன்றாகும். இங்கு நடைபெறவுள்ள இரண்டாவது மாநாடு அரசியல் வளத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. விஜயின் அரசியல் பயணம் எந்தவிதமாக தொடர்ந்து செல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top