Connect with us

திடீரென கண்கலங்கிய VJ மணிமேகலை! ஜீ தமிழில் என்ன நடந்தது?

Featured

திடீரென கண்கலங்கிய VJ மணிமேகலை! ஜீ தமிழில் என்ன நடந்தது?

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினி VJ மணிமேகலை. இவருக்கு விஜய் டிவியின் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. கோமாளியாக மக்களை மகிழ்வித்து வந்த மணிமேகலை, “குக் வித் கோமாளி” சீசன் 5ல் தொகுப்பாளினியாக வந்தார். பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக, விஜய் டிவியில் இருந்து வெளியேறினார் என்று அவர் அறிவித்தார்.

இவரின் வெளியேற்றத்திற்கு தொகுப்பாளினி பிரியங்கா தான் காரணம் என சில ரசிகர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். விஜய் டிவியில் இருந்து வெளியேறிய VJ மணிமேகலை தற்போது ஜீ தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி “டான்ஸ் ஜோடி டான்ஸ்” நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் ஒளிபரப்பான “டான்ஸ் ஜோடி டான்ஸ்” நிகழ்ச்சியில் VJ மணிமேகலை கண்கலங்கி அழுதார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அப்போது VJ மணிமேகலை கூறியதாவது, “நான் 8 வருடம் அங்கொரே தான் இருந்தேன். ஒரு காமெடி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தப்போ, இவங்க அங்கொரே, லீட் கொடுப்பாங்க, லிங்க் கொடுப்பாங்க, இவங்க பண்ணினா எப்படி பண்ணுவாங்க என்று ஏளனமாக பேசினாங்க. ஆனா, இப்போ மணிமேகலை சூப்பர் பண்ணுவாங்க, அவங்களுக்கு அங்கோரிங் வருமா என சொல்ற அளவுக்கு இப்போ மாறி இருக்கேன். உழைச்சா எது வேணா செய்யலாம்” என்றார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top