Connect with us

ஜனநாயகன் ஷூட்டிங்கில் விஜய்க்கு ரசிகர் கொடுத்த பரிசு! என்ன பரிசு தெரியுமா?

Featured

ஜனநாயகன் ஷூட்டிங்கில் விஜய்க்கு ரசிகர் கொடுத்த பரிசு! என்ன பரிசு தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்குகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கொடைக்கானலுக்கு சென்ற விஜய்க்கு, வழியெங்கும் தளபதி ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். படப்பிடிப்பு நடைபெறும் இடத்திலும், விஜய்யை நேரில் காண அதிகமான ரசிகர்கள் காத்திருந்தனர்.

ரசிகர்களில் ஒருவர் விஜய்க்கு ஒரு அம்மன் புகைப்படத்தை பரிசாக அளித்தார். மேலும் பலரும் மாலை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர். இன்று, படப்பிடிப்பை முடித்துவிட்டு, விஜய் சென்னை திரும்புகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மலேசியாவில் இத்தனை கோடிக்கு விற்பனையானதா 'ஜனநாயகன்'? ரெக்கார்ட் பிரேக் செய்த தளபதி விஜய்!

More in Featured

To Top