Connect with us

இனியாச்சும் கவனமா இருங்க – வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

Cinema News

இனியாச்சும் கவனமா இருங்க – வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படை சார்பில் பிரம்மாண்டமாக நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாகவும், இனி வரும் காலங்களில் தமிழக அரசு பாதுகாப்பிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினி Fans Festival Mode ON! ‘அண்ணாமலை’ மீண்டும் பாக்க Ready-aa?

More in Cinema News

To Top