Connect with us

அமரன் படத்தின் வெற்றிக்காக விஜய் இயக்குனர் ராஜ்குமாரை பாராட்டினார்!

Featured

அமரன் படத்தின் வெற்றிக்காக விஜய் இயக்குனர் ராஜ்குமாரை பாராட்டினார்!

சமீப காலமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற “அமரன்” படத்தின் வெற்றியால், அந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மிகவும் கவனத்திற்கு வந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த இந்த படம், 300 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவில் புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.

இதனை முன்னிட்டு, நடிகர் விஜய் அமரன் பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டினார். இந்த சந்திப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விஜய்யுடன் நடந்த இந்த சந்திப்பின் புகைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

ராஜ்குமார் பெரியசாமியின் பதிவு:

“12 வருடம், 2 மாதம், 1 நாள், 15 மணி நேரம் கழித்து விஜய் உடன் மீண்டும் போட்டோ எடுத்திருக்கிறேன்.”

இவ்வாறு குறிப்பிட்டு, அவர் 12 வருடங்களுக்கு முன் விஜயுடன் எடுத்த புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி, விஜய் மற்றும் அமரன் படக்குழுவிற்கு ரசிகர்கள் பெருமளவில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அமரன் படத்தின் வெற்றி மற்றும் விஜய்யின் பாராட்டு இரண்டும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top