Connect with us

நீட் மட்டும்தான் உலகமா? பெரியாருக்கு சாதி சாயம் பூச முயற்சி! கல்வி விருதுகள் விழாவில் தளபதி விஜய் பேச்சு..

Featured

நீட் மட்டும்தான் உலகமா? பெரியாருக்கு சாதி சாயம் பூச முயற்சி! கல்வி விருதுகள் விழாவில் தளபதி விஜய் பேச்சு..

நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான தளபதி விஜய், வருடா வருடம் 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து கல்வி விருதுகளை வழங்கி வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வந்த நிலையில், இன்று மூன்றாம் ஆண்டு கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் மாணவர்களுக்கு விருது வழங்குவதற்கு முன்னர் தளபதி விஜய் சிறப்புச் சொற்பொழிவு வழங்கினார்.

விஜய் பேச்சில் குறிப்பிடத்தக்க முக்கியமான கருத்துக்கள் இதுவாக உள்ளன. “உங்கள் குழந்தைகளின் விஷயத்தில் எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம். அவர்களுக்கு அழுத்தம் ஏற்படுத்தாதீர்கள். அவர்களுக்கு என்ன பிடிக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதன்படி வழிநடத்துங்கள்.

நீட் மட்டும் உலகமா? நீட்ட தாண்டி இந்த உலகம் ரொம்ப பெரியது. அதில் நீங்கள் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்பது பெரிய விஷயம் அல்ல. சாதாரண விஷயமாகும். நல்லவர்கள், நம்பிக்கையுடையவர்கள், இதுவரை ஊழல் செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோருக்கு வேண்டுகிறேன்.

சாதி, மதத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிவினையை வளர்க்கும் சிந்தனைக்கு பக்கம் போக வேண்டாம். உங்கள் எண்ணங்களை பாதிக்க அனுமதிக்க வேண்டாம். விவசாயிகள் சாதி, மதம் பார்த்து பொருளை விளைவிப்பதில்லை. தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்து உற்பத்தி செய்வதில்லை. வெயில், மழை எல்லாம் சாதி மதமா இருக்கிறது? போதைப் பொருட்களை அறவே ஒதுக்கியது போல் சாதி மதத்தையும் தூரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். UPSC சிவில் சர்வீசஸ் தேர்விலும் கூட சாதி சாயம் பூசுவதுபோல் கேள்விகள் எழுந்துள்ளன. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top