Connect with us

நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை வாங்கிய Red Gaint நிறுவனம்! Viral!

Cinema News

நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை வாங்கிய Red Gaint நிறுவனம்! Viral!

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது ’அக்னி சிறகுகள்’, ’ஹிட்லர்’, ’காக்கி’, ’ரோமியோ’ மற்றும் ’வள்ளி மயில்’ ஆகிய ஐந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் ’ரோமியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குட் டெவில் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக மிருணாளினி ரவி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ’ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புதிய போஸ்டரை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சமீபத்தில் ’சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படத்தை ரிலீஸ் செய்த நிலையில் அடுத்ததாக ’லால் சலாம்’ உள்பட ஒருசில படங்களை வெளியிடவுள்ளது. மேலும் இந்நிறுவனம் கமல்ஹாசன் நடித்துவரும் ’இந்தியன் 2’ மற்றும் ’தக்ஃலை’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 ஆண்டுகளுக்கு பின் ஜெய்ப்பூரில் ராஜஸ்தானை வெல்லுமா மும்பை - டாஸ் வென்ற MI பேட்டிங் செய்ய முடிவு..!!!

More in Cinema News

To Top