Connect with us

விஜய் ஆண்டனியின் வித்தியாசமான பழக்கம் குறித்து அவர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Featured

விஜய் ஆண்டனியின் வித்தியாசமான பழக்கம் குறித்து அவர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமையுடன் திகழ்பவர் விஜய் ஆண்டனி. சுக்கிரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இசைத் துறையில் வெற்றிகரமாக பயணித்து வந்த விஜய் ஆண்டனி, ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் போன்ற வெற்றிப் படங்களை வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன் போன்ற திரைப்படங்களில் எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இயக்கியுள்ள ‘மார்கன்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் வழங்கிய ஒரு பேட்டியில் “செருப்பு அணியாமல் நடப்பது ஏன்?” என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, இதுபோன்று கூறினார்:

“செருப்பு கழற்றி வெறும் காலுடன் நடக்கும்போது மனது நிறைவாக இருக்கிறது. இந்த பூமிக்கும் நமக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு பிரபலமாக இருப்பதால் விமானப் பயணம், ஏ.சி. அறையில் உறக்கம், பங்களா வீடு போன்ற ஆடம்பரங்கள் நம்முடன் ஒட்டிவிடுகிறது. நாமும் அதில் பழகிவிடுகிறோம். ஆசைப்பட்டாலும் அதை விட்டுவிட முடியாது. எனவே, செருப்பு அணியாமல் நடப்பது போன்ற சில எளிய பழக்கங்கள் மூலம் எனை ஈடுபடுத்தி, என் மனதை பக்குவப்படுத்திக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா – மருத்துவர்கள் அளித்த அப்டேட்!

More in Featured

To Top