Connect with us

5 நாள் முடிவில் விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ படம் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா?

Featured

5 நாள் முடிவில் விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ படம் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா?

இசையமைப்பாளராக தமிழ்சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கிய விஜய் ஆண்டனி, தற்போது சிறந்த நடிகராகவும் மக்களால் வரவேற்கப்படும் ஒரு முக்கியமான கலையிலானையாக வளர்ந்துள்ளார்.

சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தி, வெற்றியும் பெற்றுள்ளார். தற்போது, அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன் போன்ற திரைப்படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகிய ‘மார்கன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், கிரைம் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனியுடன் அஜய், சமுத்திரக்கனி, பிரகிடா, தீப்ஷிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள ‘மார்கன்’ திரைப்படம், வெளியான ஐந்து நாட்களிலேயே ரூ.5 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ஆஸ்கார் 2026 பந்தயத்தில் இந்திய படங்கள் – ‘காந்தாரா’ மற்றும் ‘தான்வி தி கிரேட்’ சாதனை”

More in Featured

To Top