Connect with us

வித்யா பிரதீப்பிற்கு ஆண் குழந்தை பிறந்தது! இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மகிழ்ச்சியான புகைப்படம்..

Featured

வித்யா பிரதீப்பிற்கு ஆண் குழந்தை பிறந்தது! இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மகிழ்ச்சியான புகைப்படம்..

2010ல் திரையுலகில் காலடி வைத்த நடிகை வித்யா பிரதீப், 2018ல் வெளியான தடம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். வெள்ளித்திரை மட்டுமின்றி, சின்னத்திரையிலும் பிரபலமான இவர், அழகி சீரியலில் கதாநாயகியாக திகழ்ந்து மக்களிடம் பெரும் கவனம் பெற்றார்.

இந்நிலையில், நடிகை வித்யா மற்றும் அவரது கணவர் மைக்கேல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஜூலை மாதம், தன்னுடைய திருமணத்தை பற்றியும் 13 வருட அனுபவத்தை பற்றியும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். சில வாரங்களுக்கு முன் தனது கர்ப்பிணி போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு அனைவரையும் கவர்ந்தார்.

தற்போது, தனது அழகிய ஆண் குழந்தையின் புகைப்படத்துடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் பகிர்ந்துள்ளார். திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விவாகரத்துக்கு பின்னும் ஜீவி பிரகாஷ் மீது ஏக்கமாக இருக்கும் சைந்தவி, வைரலாகும் பேட்டி

More in Featured

To Top