Connect with us

விடாமுயற்சி படத்தின் சென்சார் சான்றிதழ்: கெட்ட வார்த்தைகள் கத்தரியுடன் திருத்தம்!

Featured

விடாமுயற்சி படத்தின் சென்சார் சான்றிதழ்: கெட்ட வார்த்தைகள் கத்தரியுடன் திருத்தம்!

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடித்து உருவாகியிருக்கும் “விடாமுயற்சி” படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது. இதில் படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் 46 வினாடிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில், பல வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக “விடாமுயற்சி” படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ரிலீசுக்கு தாமதமாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

இதன் புதிய வெளியீடு தேதி ஜனவரி 23 அல்லது 30 என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

அதன்படி, படத்திலிருந்து சில கெட்ட வார்த்தைகளை சென்சார் குழு திருத்தி கத்திரி போட்டு தூக்கியுள்ளதாகவும் அந்த தகவலும் சென்சார் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது, ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக மிகவும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top