Connect with us

விடாமுயற்சி படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

Featured

விடாமுயற்சி படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் உருவான ஆக்ஷன் கதைக்களத்தில் கதை கொண்ட “விடாமுயற்சி” திரைப்படம், கடந்த 6ம் தேதி திரைக்கு வந்தது.

மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் அனிருத் இசை பலராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக, “Sawadeeka” பாடல் செம்ம புகழ் பெற்றது. சினிமா ரசிகர்கள் அனைவரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து, அது சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆனது.

தமிழகம் முழுவதும் 900 தியேட்டர்களுக்கு மேலே இப்படம் வெளியானது. உலகம் முழுவதும் 3650 திரைகளில் இந்த படம் ஓடியுள்ளது.

இப்போது, “விடாமுயற்சி” படத்தின் OTT ரிலீஸ் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எப்போது ரிலீஸா? இன்னும் காத்திருங்கள்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top