Connect with us

இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலிய செனட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நபர்.. யார் இந்த வருண் கோஷ்?

Varun_Ghosh_Australia_Senate

Politics

இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலிய செனட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நபர்.. யார் இந்த வருண் கோஷ்?

இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவரான பாரிஸ்டர் வருண் கோஷ், மேற்கு ஆஸ்திரேலியா சார்பாக ஆஸ்திரேலிய செனட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலிய செனட்டராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

உடல்நலக் காரணங்களால் ஓய்வு பெறவுள்ள செனட்டர் பேட்ரிக் டாட்சனுக்குப் பதிலாக தொழிலாளர் கட்சி அவரை அதிகாரப்பூர்வமாக இந்த பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

வருண் கோஷின் பெற்றோர் 1980களில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தனது மகனுடன் குடி பெயர்ந்தனர். அவர்கள் இருவரும் நரம்பியர் நிபுணர்களாக பணியாற்றிய நிலையில், வருண் கோஷ் தனது 17வது வயதிலேயே அந்நாட்டின் பெர்த்தில் உள்ள தொழிலாளர் கட்சியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.

அவர் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் காமன்வெல்த் அறிஞராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். முன்னர் நியூயார்க்கில் நிதி வழக்கறிஞராகவும், வாஷிங்டன், டிசியில் உலக வங்கியின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

2015 இல் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய வருண் கோஷ் அங்கு கிங் & வூட் மல்லேசன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். தற்போது வங்கிகள், வள நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கான சட்ட விஷயங்களைக் கையாள்கிறார்.

இந்நிலையில் தொழிலாளர் கட்சி மூலம் தொடர்ந்து பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டு வந்த வருண் கோஷை தற்போது கட்சி செனட்டராக தேர்வு செய்துள்ளது. இது தனக்கு கொடுக்கப்பட்டுள்ள மரியாதை என தெரிவித்துள்ள வருண் கோஷ், உயர்தர கல்வி மற்றும் பயிற்சியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அதற்காக உழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி - அரசுக்கு ஐடியா கொடுத்த ராமதாஸ்..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Politics

To Top