Connect with us

5 கோடி நஷ்டஈடு கேட்ட வடிவேலு…நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு!5 கோடி நஷ்டஈடு கேட்ட வடிவேலு…

Featured

5 கோடி நஷ்டஈடு கேட்ட வடிவேலு…நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு!5 கோடி நஷ்டஈடு கேட்ட வடிவேலு…

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடியனாக நடித்தவர் சிங்கமுத்து. ஜூஸ் காமெடி, என்ன வேணும் காமெடி, லெக் பீஸ் காமெடி போன்ற பல ஹிட் காமெடி காட்சிகளில் அவர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆனால், கடந்த பல வருடங்களாக இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

சிங்கமுத்து பல மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டிகளில் வடிவேலுவை குறித்த பல தகவல்களை வெளியிட்டு, அவதூறு கூறியதாக தெரிவித்தார். ஒரு நடிகரை ஆள் வைத்து அடித்தது உள்ளிட்ட பலவிதமான குற்றச்சாட்டுகளை சிங்கமுத்து பேட்டிகளில் முன்வைத்தார். இதனால், நடிகர் வடிவேலு தன்னை பற்றி அவதூறாக பேசிய சிங்கமுத்துவிடமிருந்து 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

கடந்த காலமாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்த நிலையில், சிங்கமுத்துவுக்கு இடைக்காலமாக வடிவேலு குறித்து பேச தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கில் சிங்கமுத்துவுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, இனிமேல் வடிவேலு குறித்து அவதூறு பேசாமல் இருப்பது குறித்து உத்தரவாதம் அளிக்க கூறப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “சில்லுனு ஒரு காதல்’ சூர்யாவின் மகளா இவர்? 😍 | Now she’s a Lawyer! 👩‍⚖️🔥”

More in Featured

To Top