Connect with us

வடசென்னை 2 எப்போ..? நடிகர் தனுஷ் கொடுத்த அப்டேட்!

Featured

வடசென்னை 2 எப்போ..? நடிகர் தனுஷ் கொடுத்த அப்டேட்!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் நான்கு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், ரசிகர்கள் பெரும்பாலானோர் காத்திருப்பது வடசென்னை 2 தான்.

2018-ல் வெளிவந்த வடசென்னை படத்தை ரசிகர்கள் மிகுந்த வரவேற்புடன் பார்த்தனர். இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இப்படத்தின் இறுதியில் வெற்றிமாறன், வடசென்னை 2 வரும் என்று உறுதி செய்தார். அதிலிருந்து ரசிகர்கள் தொடர்ந்து அடுத்த பகுதி எப்போது என்று கேட்டு வந்தனர். தனுஷ், வெற்றிமாறன் இருவரும் எந்த நிகழ்ச்சிக்கும் சென்றாலும், வடசென்னை 2 பற்றிய கேள்விகள் அவர்களை தொடர்ந்தது.

நேற்று தனுஷின் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தனுஷ் புதிய அப்டேட்டை வெளியிட்டார். 2018-ல் இருந்து கேட்டு வந்தவர்கள், “அடுத்த வருடம்” என்றார். இதன் மூலம், வடசென்னை 2 அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்குகிறது என்று உறுதியாகிவிட்டது. இதை கேட்ட ரசிகர்கள் இடைவிடாமல் ஆரவாரம் எழுப்பினர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கணவன் போல் பிள்ளை…” – ஜாய் கிரிஸில்டாவின் மனதை உருக்கும் பதிவு!

More in Featured

To Top