Connect with us

இன்று பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின்: அசரவைக்கும் சொத்து மதிப்பு..

Featured

இன்று பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின்: அசரவைக்கும் சொத்து மதிப்பு..

உதயநிதி ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் பேரன், சினிமா மற்றும் அரசியலில் தனது தனித்துவமான பயணத்தை தொடங்கியவர். அவர் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் விஜய், சூர்யா, கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். 2012ல் “ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், தொடர்ந்து கதிர்வேலன் காதல், நண்பேண்டா போன்ற காமெடி படங்களில் நடித்து விருந்தார்.

அவரது சினிமா பயணம் “நிமிர்”, “கண்ணே கலைமானே”, “சைக்கோ”, “நெஞ்சுக்கு நீதி”, “கலகத் தலைவன்” போன்ற படங்களுடன் வெற்றிக்கு வழிவகுத்தது.

அரசியலுக்கு வரும் போது, 2012ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டி போட்டு எம்.எல்.ஏ ஆன அவர், சினிமா மற்றும் அரசியலில் இரண்டிலும் சமநிலை நிலை கொண்டுள்ளார். ஆனால், அரசியல்-சினிமா இரண்டிலும் சீரான பயணம் தொடர முடியாது என முடிவெடுத்து, “மாமன்னன்” படத்தை தனது கடைசி படம் என அறிவித்தார். அதன் பிறகு, சினிமாவை விட்டு அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி, தற்போது தமிழக அரசு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று அவரது 48 – வது பிறந்தநாளை கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, உதயநிதிக்கு ரூ. 80 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top