Connect with us

“ரியோ நடிப்பில் வெளியான ‘JOE’ படம் எப்படி இருக்கு? இதோ ட்விட்டர் விமர்சனம்..!”

Cinema News

“ரியோ நடிப்பில் வெளியான ‘JOE’ படம் எப்படி இருக்கு? இதோ ட்விட்டர் விமர்சனம்..!”

2013ஆம் ஆண்டு விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்னும் தொடரில் நடிகராக அறிமுகமாகிய ரியோ ராஜ், அதன்பின், சில ஆண்டுகள் சன் மியூசிக்கில் வீடியோ ஜாக்கியாகப் பணிபுரிந்தார். பின், ரியோ ராஜ், விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாவது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன்பின் படிப்படியாக பெரிய திரையில் தோன்ற முயற்சித்த ரியோ ராஜ், விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தின் ஒரு துணை வேடத்தில் நடித்தார். பின், சிவகார்த்திகேயனின் புரொடக்‌ஷன் நிறுவனத்தின்பேரில், ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

அதனைத் தொடர்ந்து, பிளான் பண்ணி பண்ணனும் என்னும் நகைச்சுவை படத்தில் நடித்தார். இந்நிலையில் வெகுநாட்களாக ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கும் ரியோ ராஜ், இதற்காக ஒன்றரை வருடங்களாக தாடி வளர்த்து வெவ்வேறு பரிமாணங்களுடன் நடித்திருக்கும்படம் தான், ஜோ. இந்நிலையில் இப்படம் இன்று (நவ.24) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முன்னதாக இத்திரைப்படத்தின் சிறப்புக்காட்சி நவம்பர் 21, 22 தேதிகளில் சென்னையில் திரையிடப்பட்டது. இதில் முக்கியப் பிரபலங்கள், சினிமா ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் கலந்துகொண்டு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரடைப்பால் இசையமைப்பாளர் தேவா காலமானதாக தகவல்.. திரையுலகினர் அதிர்ச்சி!

More in Cinema News

To Top