Connect with us

ஆரம்பமே ரணகளம்.. விஜய் கட்சியின் மாவட்ட செயலாளர் விலகல்.. புதிய செயலாளர் நியமனம்

Vijay_Billa_Jegan

Cinema News

ஆரம்பமே ரணகளம்.. விஜய் கட்சியின் மாவட்ட செயலாளர் விலகல்.. புதிய செயலாளர் நியமனம்

தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த பில்லா ஜெகன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுமன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த வாரம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டதோடு, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார். இதற்காக கட்சியை தயார்படுத்துவதற்கான முதல் படியாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்களாக இருந்தவர்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்டச் செயலாளர்களை அழைத்து சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், தூத்துக்குடி மாவட்ட செயலாளராக உள்ள பில்லா ஜெகன் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த புஸ்ஸி ஆனந்த், பில்லா ஜெகனை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துவிட்டு, அவருக்கு பதிலாக எஸ்.ஜே.சுமன் என்பவரை புதிய மாவட்ட செயலாளராக அறிவித்துள்ளார். இந்த எஸ்.ஜே.சுமன் என்பவர் பில்லா ஜெகனின் சகோதரர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top