Connect with us

மாபெரும் வெற்றியடைந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

Featured

மாபெரும் வெற்றியடைந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

சமீபத்தில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி, தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. சசிகுமார் மற்றும் சிம்ரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார்.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், குட் நைட், லவ்வர் போன்ற ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம். இதையும் தயாரித்துள்ளது. படத்தில் எம். எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேற்று, இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விழா பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து நடைபெற்றது.

மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள இப்படம், ரிலீஸான முதல் நாளிலேயே வசூலில் பட்டையை கிளப்பியது. தற்போது, உலகளவில் இப்படம் ரூ. 54 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படக்குழுவுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top