Connect with us

பொங்கல் பரிசு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

Featured

பொங்கல் பரிசு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ஒவ்வரு வருடமும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த வருடமும் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது .

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன் அறிவித்தது . அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு மற்றும் இவற்றுடன் ருபாய் 1000 ரொக்க பணம் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது .

அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் தற்போது மக்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு கரும்பு கொள்முதல் செய்ய மாவட்டம் மற்றும் வட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு.

முழு நீளக் கரும்பை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவு.

சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் உதவி ஆணையர் கொண்ட குழு அமைப்பு.

பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தினசரி கண்காணிக்க தொடர்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி பொங்கல் பரிசு குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நாங்குநேரி சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் +2 தேர்வில் சாதனை - உயர்கல்விக்கு உதவுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

More in Featured

To Top