Connect with us

கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது மின்வாரியம் ..!!

Featured

கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது மின்வாரியம் ..!!

கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்ட மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கடந்த வாரம்‌ தென்‌ மாவட்டங்களில்‌ பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கண்ணியாகுமரி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஏற்பட்ட மின்சார பாதிப்பினை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்‌. பகிர்மான கழகம்‌ போர்கால அடிப்படையில்‌, பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்போது அனைத்து பகுதிகளுக்கும்‌ சீரான மின்‌ விநியோகம்‌ வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்‌, கனமழை காரணமாக மின்‌ வயர்கள்‌ மற்றும்‌ மின்‌சாதனங்கள்‌ பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள்‌ உள்ளபடியால்‌. பொதுமக்கள்‌ கீழ்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அன்புடன்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • வீட்டில்‌ மின்‌ சுவிட்சுகளை “ஆண்‌” செய்யும்‌ போது பாதுகாப்புக்காக காலில்‌ செருப்பு அணிந்து கொள்ளவும்‌.

  • நீரில்‌ நனைந்த பேன்‌, லைட்‌ உட்பட எதையும்‌ மின்சாரம்‌ வந்தவுடன்‌ இயக்க வேண்டாம்‌.

  • வீட்டின்‌ உள்புற சுவர்‌ ஈரமாக இருந்தால்‌ மின்சார சுவிட்சுகள்‌ எதையும்‌ இயக்கக்‌ கூடாது.

  • மின்சார மீட்டர்‌ பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால்‌ உபயோகிக்கக்கூடாது.

  • வீட்டில்‌ மின்சாரம்‌ இல்லையென்றால்‌ அருகில்‌ இருந்து தாங்களாகவே ஒயர்‌ மூலம்‌ மின்சாரம்‌ எடுத்துவரக்கூடாது.

  • மின்‌ கம்பி அறுந்து தொங்கிக்‌ கொண்டிருந்தாலோ, மின்‌ கம்பங்கள்‌ உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ உடனடியாக மாநில மின்‌ நுகர்வோர்‌ சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற அலைபேசி எண்‌ மூலம்‌ தொடர்பு கொண்டு தகவல்‌ தெரிவிக்கவும்‌ என தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  50 நாட்களில் 14 கிலோ! 😲 அறந்தாங்கி நிஷாவின் Slim Transformation Viral!

More in Featured

To Top