Connect with us

ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Featured

ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

தமிழகத்திற்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக 8 நாட்கள் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அந்நாட்டில் உள்ள தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்தித்து பேசி வருகிறார் .

தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவும் பல புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார் .

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் கூறிருப்பதாவது :

ஸ்பெய்ன் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்!

@IndiainSpain தூதர் திரு @DineshKPatnaik அவர்கள் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார்.

இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன்.

தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன் என தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் ஸ்டலைன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022-ஆம் ஆண்டு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் சென்றிருந்தார் .

அந்தப் பயணத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதையடுத்து 2023-ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில் ஆயிரத்து 342 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்கிய தீர்ப்பு ரத்து – மீண்டும் விசாரணை ⚖️🎬

More in Featured

To Top