Connect with us

நாட்டின் இரண்டாவது உயரிய விருதுக்கு தேர்வான ஜாம்பவான்கள் – பெருமிதம் தெரிவித்த தமிழக முதல்வர்

Featured

நாட்டின் இரண்டாவது உயரிய விருதுக்கு தேர்வான ஜாம்பவான்கள் – பெருமிதம் தெரிவித்த தமிழக முதல்வர்

மத்திய அரசால் ஆண்டு தோறும் வழங்கப்படும் நாட்டின் மிக உயரிய விருதுகளுக்கு இம்முறை தமிழ்நாட்டை சேர்ந்த ஜாம்பவான்கள் தேர்வாகி உள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.

மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை துறை ) ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு துறை ), ஜோ டி குரூஸ் (இலக்கிய துறை ), சேஷம்பட்டி சிவலிங்கம் (கலை துறை ), நாச்சியார் (மருத்துவ துறை ) ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

தமிழ்நாட்டில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயியான செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன்.

அண்மையில் மறைந்த எனது நெருங்கிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top