Connect with us

‘Thug Life’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு – புகைப்படத்துடன் வெளியான அசத்தல் அறிவிப்பு..!!

Cinema News

‘Thug Life’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு – புகைப்படத்துடன் வெளியான அசத்தல் அறிவிப்பு..!!

கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் நீண்ட நெடு நாட்களுக்கு பின் உருவாகி உள்ள ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படமே ‘தக் லைஃப்’ . கமல்ஹாசனின் 234 ஆவது திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் அவருடன் சேர்ந்து சிம்பு,த்ரிஷா, நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் பல நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு சத்தமின்றி நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக க்யூட்டான போட்டோவுடன் படக்குழு அறிவித்துள்ளது.

ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அசத்தலாக தயாராகி வரும் இப்படம் குறித்த அடுத்தகட்ட அறிவிப்புக்களை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜீவா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

More in Cinema News

To Top