Connect with us

தெருவை காணவில்லை..! கலெக்டரிடம் ஜி.பி.முத்து வடிவேலு பாணியில் புகார்..

Featured

தெருவை காணவில்லை..! கலெக்டரிடம் ஜி.பி.முத்து வடிவேலு பாணியில் புகார்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் ஜி.பி. முத்து. அவர் முதலில் YouTube மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்தவர். அதன் பிறகு விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், இரண்டு வாரங்களுக்குமேல் எங்க முடியாது என கூறி, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

பின்னர் சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிய வாய்ப்புகள் இல்லாத நிலையில், மீண்டும் YouTube வீடியோக்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தூத்துக்குடி கலெக்டரிடம் ஒரு அதிர்ச்சிக்கான புகார் அளித்துள்ளார். உடன்குடி பெருமாள்புரத்தில் இருக்கும் கீழதெரு என்ற தன் வீடு உள்ள தெருவையே காணவில்லை என அவர் புகார் செய்துள்ளார்.

மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் இடத்தை, சிலர் கள்ள பத்திரங்கள் வைத்து மோசடியாக விற்பனை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தற்போது வடிவேலுவின் “கிணத்தை காணவில்லை” என்ற வசனத்தை நினைவூட்டுவதாகவும், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ்‌இல் வெடித்த முதல் வெடி! – திவாகர், கெமி இடையே கடும் வாக்குவாதம்!

More in Featured

To Top