Connect with us

அதிமுகவில் வாரிசு அரசியலுக்கு வாய்ப்பே இல்லை – கே.பி.முனுசாமி

Featured

அதிமுகவில் வாரிசு அரசியலுக்கு வாய்ப்பே இல்லை – கே.பி.முனுசாமி

அதிமுகவில் இப்போதில்லை எப்போதுமே வாரிசு அரசியலுக்கு வாய்ப்பே இல்லை என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.பி. முனுசாமி கூறியதாவது :

அதிமுக ஜனநாயக கட்சி, ஜனநாயகம் உள்ள இடத்தில் தான் கேள்வி இருக்கும். அங்கு தான் சண்டை வரும், அதிமுக ஜனநாயகம் உள்ள கட்சி. காங்கிரஸ் கோஷ்டி போல அதிமுகவில் கோஷ்டி இல்லை காங்கிரஸ் கட்சியில் 4 பேர் இருந்தால் 5 கோஷ்டி இருக்கும்.

அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை. அதிமுகவில் உழைப்பவர்கள் தானாக உயர்ந்த இடத்திற்கு வர முடியும். ஆனால் திமுகவில் தாத்தா, அப்பா, அடுத்தது மகன் என்ற நிலையில் தலைவர்கள் வருகின்றனர்.

அதிமுக நலன் சார்ந்து பாஜக உடன் கூட்டணி வேண்டாமென திருமாவளவன் கூறுகிறார். திருமாவளவன் தமிழகத்தில் பாஜக காலூன்ற கூடாது என நினைக்க கூடியவர். அதுக்காக அவர் அதிமுக நலன் சார்ந்து பேசுகிறாரா? சுயநலமாக பேசுகிறாரா என தெரியவில்லை. ஆனால் அவர் பேசுவது எங்கள் நலனுக்கானது என்றே எடுத்துக்கொள்வோம் என கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  STR 49 வெற்றிமாறன்–சிம்பு புதிய படம்: டைட்டில் ரிவீல்!

More in Featured

To Top