Connect with us

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!!!

Cinema News

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!!!

அருண் விஜய் நடிக்கும் அவரது 36வது படத்தின் டைட்டில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கலை குடும்பத்தில் பிறந்து தனது திறமையால் மட்டுமே முன்னுக்கு வந்த ஒரு சில நடிகர்களின் பட்டியலில் டாப் 5 இடத்தில் இருப்பவர் நடிகர் அருண் விஜய். நல்ல பல கதைகளை தேர்ந்தெடுத்து அந்த படத்திற்கு தனது முழு உழைப்பையும் போட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக வலம் வரும் இவரது 36வது படத்தை மான் கராத்தே, கெத்து படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் CS இசை அமைக்கிறார்.

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இந்த படத்திற்கு ரெட்ட தல என பெயர் வைத்துள்ளதாக டக்கரான போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் அருண் விஜய் சமீப காலமாக கையில் எடுக்கும் அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் தற்போது இந்த படமும் அவருக்கு வெற்றி படமாக அமையுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தலையின் பிறந்தநாள் கொண்டாட்டம் - விலையுயர்ந்த பைக்கை பிறந்தநாள் பரிசாக கொடுத்த ஷாலினிஅஜித்..!!

More in Cinema News

To Top