Connect with us

ரஜினிகாந்த் ‘தலைவர் 173’ – இயக்குநர் விவகாரம் தொடர்கிறது 👀

Cinema News

ரஜினிகாந்த் ‘தலைவர் 173’ – இயக்குநர் விவகாரம் தொடர்கிறது 👀

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான ‘தலைவர் 173’ குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆரம்பத்தில் இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் இந்தத் திட்டத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, புதிய இயக்குநர் யார் என்பதில் இன்னும் தெளிவு ஏற்படாததால், திரையுலக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் குழப்பம் அதிகரித்துள்ளது.

பல முன்னணி இயக்குநர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. பொங்கல் காலத்தை முன்னிட்டு இந்த விவகாரம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், ‘‘தலைவர் 173’ தொடர்பான அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 🎬🔥

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top