Connect with us

ஓடிடியில் வெளியாக இருக்கும் ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

ஓடிடியில் வெளியாக இருக்கும் ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் ஹீரோஷிமா மற்றும் நாகஸாகியை உருத்தெரியாமல் அழித்து சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாக காரணமான அணு குண்டின் தந்தை எனக் கொண்டாடப்பட்ட ஓபன்ஹெய்மருக்கு எதிராக தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது .

இந்த பிரச்சனைகளில் இருந்து அவர் மீண்டு வந்தாரா இல்லையா என்கிற கதையை மையக்கருவாக வைத்து இயக்குநர் கிறிஸ்டோபர் ஓபன்ஹெய்மர் படத்தை இயக்கி உள்ளார்.

உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணுகுண்டை பற்றிய படம் இதுவாகும். இப்படத்தில் அணுகுண்டு வெடிக்கும் ஒரு காட்சி இருப்பதாகவும், அதற்காக உண்மையில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் சக்கை போடு போட்ட இப்படம் திரையுலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு சுமார் 13 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது .

இதையடுத்து இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என அனைவரும் காத்திருந்த நேரத்தில் இப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி மார்ச் 21 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வானம் இடி முழங்க பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top