Connect with us

தியேட்டரில் பிளாப் ஆனாலும்… OTT-யில் சாதனை படைத்த ‘தக் லைஃப்’!

Featured

தியேட்டரில் பிளாப் ஆனாலும்… OTT-யில் சாதனை படைத்த ‘தக் லைஃப்’!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரங்களில் வெளியாகிய திரைப்படம் ‘தக் லைஃப்’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுடன் தற்போது OTT தளத்தில் சாதனை படைத்துள்ளது. கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படத்திற்கு இசையை ஏ.ஆர். ரஹ்மான் அமைத்திருந்தார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம், வெளியானதும் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக, கமல்ஹாசன் மற்றும் த்ரிஷா நடித்த சில காட்சிகள் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால், படம் திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. விமர்சனங்களும், சமூக வலைதளங்களில் ஏற்பட்ட மீம்ஸ்களும் இப்படத்தின் வசூலை பாதித்தன.

இருப்பினும், ‘தக் லைஃப்’ திரைப்படம் OTT தளத்தில் வெளியானதும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியான முதல் வாரத்திலேயே 24 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. இதன்மூலம், இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட OTT படங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது.

இப்போது, ஜூலை 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான இரண்டாம் வாரத்தில், இப்படம் 33 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. இதன் மூலம், ‘தக் லைஃப்’ திரைப்படம் முதலிடத்தை பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. தியேட்டரில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத இப்படம், OTT தளத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பார்வை எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top