Connect with us

பிறந்தது ஒரு தவறா – பிஞ்சு குழந்தையை கட்டைப்பையில் வைத்து கொன்ற கொடூர தாத்தா..!!

Featured

பிறந்தது ஒரு தவறா – பிஞ்சு குழந்தையை கட்டைப்பையில் வைத்து கொன்ற கொடூர தாத்தா..!!

மணப்பாறையில் பிறந்து சில நாட்களேயான குழந்தையை கட்டை பையில் வைத்து கொன்ற தாத்தாவின் கொடூர செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தையை , கட்டை பையில் வைத்து தாத்தா வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார் அப்போது அந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது .

பின்னர் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலை கருங்குள பஞ்சாயத்து உறை கிணற்றில் வீசியுள்ளதாகக் கூறி, குழந்தையின் தாத்தா மரிய ஜேக்கப் வையம்பட்டி காவல் நிலையத்தில் வந்து சரண் அடைந்துள்ளார் .

இதையடுத்து கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மற்றும் தாய், தந்தை ஆகியோரின் விபரங்கள் குறித்து டி.எஸ்.பி ராமநாதன், தலைமையில் வையம்பட்டி காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்டோர் அந்த தாத்தாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து எதற்காக தாத்தா எடுத்து சென்றார்.எதற்காக அந்த பிஞ்சு குழந்தையை கொன்றார் அந்த குழந்தை யாருடையது உள்ளிட்ட தகவல் எதுவும் தற்போது வரை வெளிவராமல் உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top