Connect with us

‘ரயில்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

Cinema News

‘ரயில்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவான ரயில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘வெண்ணிலா கபடி குழு’, ‘எம்மகன்’, ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் பாஸ்கர் சக்தி. இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் தான் ‘ரயில் ’.

குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தில் ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா எனபல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

இப்படத்தின் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது .

அதன்படி இப்படம் ஜூன் 21ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிரட்டலாக தயாராகும் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் காம்போ - பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியான சூர்யா-44 டீசர்..!!

More in Cinema News

To Top