Connect with us

“அது தான் நான் செஞ்ச தப்பு” – இயக்குநர் ஷங்கர் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு ஆதங்கம்..

Featured

“அது தான் நான் செஞ்ச தப்பு” – இயக்குநர் ஷங்கர் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு ஆதங்கம்..

பிரம்மாண்ட படங்கள் எடுப்பதில் பிரசித்தி பெற்ற இயக்குநர் ஷங்கர், தன்னுடைய படங்களில் தயாரிப்பாளர் பணத்தை அதிகம் செலவழிக்க வைப்பவர் எனும் குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே இடம்பெற்று வருகின்றன.

அவர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம், இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல், கலவையான விமர்சனங்களை சந்தித்து, வசூலில் தோல்வியடைந்தது. இந்நிலையில், சமீபத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் எடிட்டர் ஒருவர், இந்தப் படத்திற்காக 7 மணி நேர காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும், பின்னர் அதை 3 மணி நேரமாக குறைக்க இயக்குநர் ஷங்கர் கூறியதாகவும் கூறி, அவர் மீது மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார்.

தற்போது, தயாரிப்பாளர் தில் ராஜு, ஒரு பேட்டியில் இந்த விஷயங்களை உறுதிப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். “ஷங்கர் போன்ற ஒரு பெரிய இயக்குநருடன் முன்பு நான் பணியாற்றியதில்லை. ‘கேம் சேஞ்சர்’ தான் நான் எடுத்த தவறான முடிவு. படம் உறுதியான போதே, கான்ட்ராக்டில் சில முக்கியமான விஷயங்களை தெளிவாக சேர்த்திருக்க வேண்டியதுதான். ஆனால் நான் அதை செய்யவில்லை. அதுதான் என் பெரிய தவறு. ஒரு கட்டத்துக்கு மேல், பல விஷயங்கள் என் கட்டுப்பாட்டில் இருந்து விலகின. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி ஒரு அனுபவம் மூலம்தான் கற்றுக்கொள்கிறோம். இனிமேல் இது போன்ற தவறுகளைத் தவிர்த்து, மிகவும் கவனமாக இருப்பேன்” என அவர் கூறினார்.

இந்த விளக்கத்தால், ‘கேம் சேஞ்சர்’ பட தயாரிப்பில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் இயக்குநர் ஷங்கரின் பங்களிப்பின் மீதான விமர்சனங்கள் மேலும் உறுதியாகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top