Connect with us

“அண்ணன் வரார் வழியவுடு..! OTTயில் வருகிறது LEO! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!”

Cinema News

“அண்ணன் வரார் வழியவுடு..! OTTயில் வருகிறது LEO! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!”

Master படத்துக்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘LEO’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் படம் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் படங்களில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையுடன், தமிழ் சினிமாவில் அதிகபட்ச வசூலை குவித்த 3ஆவது படம் என்ற அடையாளத்தையும் ‘LEO’ பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘LEO’ திரைப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி Netflix OTT தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாகவே சப்டைட்டிலுடன் கூடிய HD Print பைரசியில் வெளியானது படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top