Connect with us

“வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள்! அயோத்தி ராமர் கோவில் குறித்து தலைவர் ரஜினிகாந்த்!”

Cinema News

“வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள்! அயோத்தி ராமர் கோவில் குறித்து தலைவர் ரஜினிகாந்த்!”

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று நண்பகல் 12.20 மணிக்கு கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்க, இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், திரைபிரலங்கள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கும் சில நாட்களுக்கு முன், அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இதையடுத்து ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமஜென்ம பூமிக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி.

500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஒரு பிரச்சனை இது. உச்சநீதிமன்றம் இதற்கு தீர்வு கொடுத்தது. தற்போது அது நிறைவேறியிருக்கிறது. இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள்” என்று தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Kalki 2 Casting Shock! 😱 பிரியங்கா சோப்ரா replacing Deepika?”

More in Cinema News

To Top