Connect with us

“தாய் கிழவி” மாஸ் வசூல்: 10 நாட்களில் ₹51 கோடி சாதனை

Cinema News

“தாய் கிழவி” மாஸ் வசூல்: 10 நாட்களில் ₹51 கோடி சாதனை

தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் “தாய் கிழவி”. இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு, ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது. நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகை Radikaa Sarathkumar தனது அனுபவமிக்க மற்றும் ஆழமான நடிப்பால் ரசிகர்களை மட்டுமின்றி விமர்சகர்களையும் கவர்ந்துள்ளார்.

பெண்களின் வாழ்க்கை, உறுதி, தைரியம் மற்றும் சமூகத்தில் அவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வலுவான கருத்துகளுடன் இப்படத்தின் கதை அமைந்துள்ளதால், குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு திரண்டு வந்து இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வெளியான இந்த படம், வெளியானது முதல் நல்ல வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெறும் 10 நாட்களிலேயே சுமார் ₹51 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி, திரைப்பட உலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ரசிகர்களின் ஆதரவும் பாராட்டுகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், “தாய் கிழவி” இந்த ஆண்டின் மிக முக்கியமான வெற்றிப்படங்களில் ஒன்றாக திரையுலகில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கல்கி 2” படத்தில் கமல் ஹாசன் சம்பளம் – 100 கோடி வரை?

More in Cinema News

To Top