Connect with us

தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை – நடிகை இவானாவின் பேட்டி..

Featured

தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை – நடிகை இவானாவின் பேட்டி..

நடிகை இவானா, தமிழ்த்திரைப்படத்துறையில் இயக்குநர் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் ‘லவ் டுடே’ திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்ததன் மூலம் பெரும் புகழ் பெற்றார்.

தற்போது, தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. சமூக ஊடகங்களில் சிறப்பாக செயல்படும் இவானாவை இன்ஸ்டாகிராமில் மட்டும் 2.3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில், தமிழ் சினிமா துறையில் காணப்படும் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ பிரச்சனையைத் தொடர்பாக இவானா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் இவானா கூறியதாவது:
“எனது தோழிகள் இந்த பிரச்சனையைப் பற்றி எனக்கு சொல்வதும், கேட்டதும் உண்டு. ஆனால் என் அம்மா எப்போதும் என்னுடன் இருப்பார். மேலும், என் உறவினர்களில் ஒருவர் எனக்கு பாதுகாப்பாக இருப்பார். அவர்களுடன் தான் நான் ஷூட்டிங்கிற்குச் செல்வேன். அதனால் இதுவரை இந்த பிரச்சனையை நான் எதிர்கொண்டதில்லை,” என தெரிவித்தார். பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம் எனவும், தொழில்துறையில் பெண்கள் எளிதாக இயங்கும் சூழல் உருவாக வேண்டும் என்றும் இந்த பேட்டியின் மூலம் இவானா நேரடியாகக் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top