Connect with us

தமிழ் சினிமா 2 பேருக்குள் முடிகிறது: ‘லவ்வர்’ புகழ் மணிகண்டனின் வருத்தம்..

Featured

தமிழ் சினிமா 2 பேருக்குள் முடிகிறது: ‘லவ்வர்’ புகழ் மணிகண்டனின் வருத்தம்..

மணிகண்டன், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அண்மையில் அறியப்பட்டு, புதிய தலைமுறையை கவரும் தனித்துவமான நடிப்பால் புகழ் பெற்றவர். விக்ரம் வேதா, காலா போன்ற மிகப்பெரிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, ஜெய் பீம் படத்தில் சிறந்த நடிகர் என பாராட்டப்பட்டார். அதோடு, குட் நைட் படமும் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த ‘லவ்வர்’ படமும் இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

இந்நிலையில், மணிகண்டன் தனது சமீபத்திய பேட்டியில் தமிழ் சினிமாவின் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, “தமிழ் சினிமா தற்போது சில பேர் மட்டுமே வழிகாட்டி வருகின்றனர். நம்மிடம் ஹாலிவுட் மற்றும் டோலிவுட் போன்ற சினிமாவுகளில் 10 முதல் 15 ஹீரோக்கள் இருக்கின்றனர். நான் கடந்த 4 மாதங்களில் 140க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டுள்ளேன். இதுபோன்ற பலர் இருக்கின்றனர். ஆனால், ஏன் தமிழ் சினிமாவில் வெறும் 4, 5 ஹீரோக்களை மட்டும் முக்கியமாக வைத்து சினிமாவை முடித்து விடுகிறார்கள்? சினிமாவை நம்பி பல நடிகர்கள் இருக்கின்றனர், இன்னும் வருகிறார்கள். அவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பேட்டி மூலம், மணிகண்டன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு அடுத்தடுத்து ஏற்கப்படும் கதைகளின் எண்ணிக்கையை மிகப்பெரிய சவாலாகக் குறிப்பிட்டார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  📺 OTT அப்டேட் – “Happy Raj” ரசிகர்களை கவரும் குடும்ப திரைப்படம்

More in Featured

To Top