Connect with us

தமன்னாவின் மனம் திறப்பு: வட-தெற்கு சினிமா பிரிவினைகளை தவிர்க்க வேண்டிய நேரம்..

Featured

தமன்னாவின் மனம் திறப்பு: வட-தெற்கு சினிமா பிரிவினைகளை தவிர்க்க வேண்டிய நேரம்..

தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா, தென் மற்றும் வட இந்திய சினிமா வேறுபாடுகளை பற்றி தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தமன்னா தனது நீண்டகால கரியரில் “அயன்”, “பையா”, “வீரம்”, “ஜெயிலர்” போன்ற வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றார். இப்போது, அவர் நடித்து முடித்த “சிக்கந்தர் கா முக்தார்” படம் நவம்பர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

தமன்னா பேட்டி ஒன்றில், வட தெற்கு சினிமா பிரிவினைகள் குறித்து தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்.
“சினிமா துறையில் இருந்து இது போன்று பிரிவினை கருதல்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. தென்னிந்திய மற்றும் வட இந்திய சினிமா இணைந்து பான்-இந்தியா தரத்தில் படங்களை உருவாக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

தமன்னாவின் இந்த கருத்துக்கள் சினிமா உலகில் ஏகமனதாக கவனம் ஈர்த்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top