Connect with us

தமன்னா வருத்தம்: ‘தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?

Featured

தமன்னா வருத்தம்: ‘தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?

தமன்னா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக 20 ஆண்டுகளாக பிரபலமாக வலம் வருகிறார். அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை 4, ஜெயிலர் போன்ற பல பிரபல படங்களில் நடித்த அவர், தற்போது இளம் நடிகைகளுக்கும் போட்டியாக சினிமாவில் தொடர்ந்து சாதனை படைத்துவருகிறார். தமன்னா நடனத்திலும் சிறந்த வெற்றி பெற்றுள்ளார், குறிப்பாக ஜெயிலர் படத்தில் காவாலயா பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும், சமீபத்தில் வெளியான ஸ்த்ரி 2 படத்திலும் தமன்னா ஆடிய ஆஜ் கிராத் பாடல் பரபரப்பை ஏற்படுத்தி, வசூலில் சாதனை புரிந்துள்ளது. இது அந்தப் படத்திற்கு ஒரு பெரும் வெற்றியாக அமைந்தது.

இந்த வெற்றிகள், தமன்னாவுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் இருந்து அதிக அழைப்புகளை உண்டாக்கியுள்ளது. ஆனால், அவர் இந்த சூழலில் சிறிது வருத்தம் அடைந்துள்ளுள்ளார். தமன்னா இதைப் பற்றி கூறும்போது, “நான் ஆடிய ஒரு பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு உதவினால், அது எனக்கு மகிழ்ச்சிதான். ரஜினி படம் என்பதால் ஜெயிலர் படத்தில் ஆடினேன். ஸ்த்ரி 2 படத்தின் இயக்குனர் என் நண்பர் என்பதால் அந்த படத்திலும் ஆடினேன். அதற்காக என்னை தொடர்ந்து ‘குத்தாட்ட நடிகை’ என்ற ரீதியில் ஆட சொல்லப்படுவது எனக்கு எப்படி?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top