Connect with us

டி20 உலக கோப்பை : நின்று ஆடிய விராட் கோலி – தென்னாப்பிரிக்கா அணிக்கு 177 ரன்கள் இலக்கு..!!

Featured

டி20 உலக கோப்பை : நின்று ஆடிய விராட் கோலி – தென்னாப்பிரிக்கா அணிக்கு 177 ரன்கள் இலக்கு..!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

20 அணிகள் பங்கேற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அமரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற பல அற்புதமான ஆட்டங்களை கடந்து இன்று இறுதிப்போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது .

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தங்களது முழு திறனையும் காட்டி வருகிறது .

அதன்படி இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார் .

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் கேப்டன் ரோஹித் மற்றும் கோலி களமிறங்கினர் . இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த கேப்டன் ரோஹித் 9 ரன்களில் வெளியேற அடுத்த வந்த பண்டும் வந்த வேகத்தில் நடையை காட்டினார்.

பின்னர் வந்த அக்சர் பட்டேலுடன் கைகோர்த்த விராட் கோலி தனது நிதனான ஆட்டத்தை தொடர்ந்து வந்தார் . ஒருபக்கம் அக்சர் அதிரடி காட்ட மறுபக்கம் கோலி பொறுப்புடன் ஆடி வர அணிக்கு தேவையான ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது.

இதில் அரைசதம் கடப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்சர் 47 ரன்களில் வெளியேற மறுபக்கம் ஆடிய அரைசதம் கடந்து அசத்தினார். இதையடுத்து 76 ரன்கள் எடுத்த நிலையில் கோலி வெளியேற பின்னர் துபே , ஜடேஜா தங்களை முடிந்ததை செய்து வெளியேறினர் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 176 ரன்கள் குவித்துள்ளது . இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் முதல் முறை உலகக்கோப்பை டி20 தொடரில் முதல் முறை இறுதிப்போட்டி வரை வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி கோப்பையை வெல்லுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் OTT தளங்களில் இந்த வாரம் புதிய படங்கள் வெளியீடு – ரசிகர்களுக்கு வீட்டு திரையரங்க அனுபவம்!

More in Featured

To Top