Connect with us

“நாளை வருகிறான் உதிரன்..! தரமான அப்டேட்டுடன் ‘Kanguva’ படக்குழு வெளியிட்ட புதிய Poster!”

Cinema News

“நாளை வருகிறான் உதிரன்..! தரமான அப்டேட்டுடன் ‘Kanguva’ படக்குழு வெளியிட்ட புதிய Poster!”

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு செம அப்டேட் ஒன்றையும் கூறியுள்ளனர். நடிகர் சூர்யா 10 கெட்டப்புகளில் நடித்துவரும் திரைப்படம் ‘கங்குவா’.

இந்த படம் தமிழ் உட்பட 10 மொழிகளில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் சூர்யாவின் திரையுலக வாழ்வில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டு நாளை காலை 11 மணிக்கு உதிரன் என்ற கேரக்டரின் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். மேலும் உதிரம் உள்ள கைகளுடன் உதிரன் இருக்கும் போஸ்டரையும் வெளியிட்ட நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி..!!!

More in Cinema News

To Top