Connect with us

“5 வித்தியாசமான Stunt காட்சிகள்! இதுவரை இல்லாத வகையில்… கங்குவா குறித்து பிரபலம் சொன்ன தகவல்!”

Cinema News

“5 வித்தியாசமான Stunt காட்சிகள்! இதுவரை இல்லாத வகையில்… கங்குவா குறித்து பிரபலம் சொன்ன தகவல்!”

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் ஐந்து வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் ‘கங்குவா’ படத்தில் இடம் பெற்றுள்ளதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். ‘கங்குவா’ படத்தின் மேக்கப் கலைஞர் ரஜினி அம்பாடி என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘கங்குவா’ படத்தில் இடம் பெற்ற ஸ்டண்ட் காட்சிகள் குறித்து தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் அண்டர் வாட்டர் ஸ்டண்ட் காட்சி, மரக்கிளைகளில் நின்று கொண்டு ஸ்டண்ட் காட்சி, பிளைட் ஸ்டண்ட் காட்சி, பீச் ஸ்டண்ட் காட்சி மற்றும் படகுகளில் ஸ்டண்ட் என ஐந்து விதமான வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை இல்லாத வகையில் இந்த படத்தில் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளுமே பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படமாக்கப்பட்டது என்றும் ரசிகர்கள் திரையில் இந்த ஸ்டண்ட் காட்சிகளை பார்க்கும்போது ஆச்சரியம் அடைவார்கள் என்று கூறியுள்ளார்.

மொத்தத்தில் ‘கங்குவா’ படத்தின் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பார்க்கும்போது இந்த படம் இதுவரை இல்லாத வகையில் தமிழ் சினிமாவின் வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top